இலங்கை
இலங்கையில் மருந்துகளின் விலைகள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் மருந்துகளின் விலைகள் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் சட்ட சவால்களைத் தீர்ப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விடயத்தில் நிர்ணய விலைகள் விடயங்களில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் போதாமையின் காரணமாகவே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
எவ்வாறாயினும் புதிய சட்டமொன்றை இயற்றுவதா, இல்லை தற்போதுள்ள ஏற்பாடுகளை திருத்தியமைத்து முன்னெடுப்பதா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.[ஒ]