Connect with us

இலங்கை

பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகள்

Published

on

Loading

பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகள்

தேசிய கல்வியியல் கல்லூரிகள் இலங்கை கல்விப் பல்கலைக்கழக வளாகங்களாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேசிய கல்வியியல் கல்வி கல்லூரிகளும் புதிதாக உருவாக்கப்படவுள்ள இலங்கை கல்வி பல்கலைக்கழகத்தின் (Sri Lanka university of Education) வளாகங்களாக மாற்றம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

பாரம்பரிய பல்கலைக்கழக முறைமையில் இருந்து வேறுபட்டதொரு பல்கலைக்கழக முறைமைக்குள் இப்பல்கலைக்கழகமும் வளாகங்களும் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக 20 தேசிய கல்விக் கல்லூரிகள் தற்போது நாடு தழுவிய ரீதியில் இயங்கி வருகின்றன.

1985 ம் ஆண்டின் கல்வி வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் 1989 ம் ஆண்டு முதல் 20 தேசிய கல்விக் கல்லூரிகள் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், 20 வது தேசிய கல்விக் கல்லூரியாக குளியாப்பிட்டி தொழில் நுட்ப கல்வியல் கல்லூரி அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள 08 ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளும் மேற்படி பல்கலைக்கழக வளாகங்களின் கற்றல் நிலையங்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான கல்வி பல்கலைக்கழகமாக தற்போதைய மகரகம தேசிய கல்வியியற் கல்லூரி செயற்படும் எனவும், இப்பிரதான பல்கலைக்கழகம் ஊடாகவே கல்விமானி பட்டம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, கிழக்கில் மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை, மலையகத்தில் தலவாக்கல்லை, மேல்மாகாணத்தில் அழுத்கம ஆகிய பிரதேசங்களில் தமிழ் மொழி மூல தேசிய கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

Advertisement

இதே போல் வடக்கில் கோப்பாய், கிழக்கில் மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை, மலையகத்தில் கொட்டகல ஆகியவற்றில் ஆசிரிய கலாசாலைகளும் இயங்கி வருகின்றன.

உத்தேச இலங்கை கல்வி, பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின் கல்வியியல் கல்லூரி டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படாது.

தற்போது தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படும் கல்விமானி பட்டப்படிப்புகள் யாவும் உத்தேச இலங்கை கல்வி பல்கலைக் கழகத்தின் தொடருறு கல்வி நிலையங்களாக மாற்றம் பெறும் எனவும்,

Advertisement

இதனடிப்படையில் உத்தேச கல்வி பல்கலையின் கீழ் 20 வளாகங்களும் 08 கற்கை நிலையங்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவன பிராந்திய கற்கை நிலையங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இதைவிட, இக்கல்வி பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புகளும், முதுமானி கற்கை நெறிகளும் ஆரம்பிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன