சினிமா
வரதட்சனை கொடுத்து ரம்யா பாண்டியனை கரம் பிடித்த கணவர்!! வெளியான புதுத்தகவல்..

வரதட்சனை கொடுத்து ரம்யா பாண்டியனை கரம் பிடித்த கணவர்!! வெளியான புதுத்தகவல்..
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார்.ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரம் பேங்காக்கிற்கு சென்றுள்ளார் ரம்யா பாண்டியன். அங்கு ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்த மாஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் ரம்யா பாண்டியனின் கணவர் லோவல் தவான் வரதட்சனை கொடுத்து ரம்யா பாண்டியனை கல்யாணம் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பஞ்சாபியை சேர்ந்த லோவல் தவான் குடும்ப வழக்கப்படி பெண்கள் வீட்டில் வரதட்சனை வாங்கமாட்டார்கள்.திருமணம் செய்யும் மாப்பிள்ளை தான் பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்யவேண்டும். அதனால், ரம்யா பாண்டியனின் கணவர் பெரும் தொகையை வரதட்சனையாக கொடுத்து திருமணம் செய்திருக்கிறாராம்.நகைகள், திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் அவரே தான் செலவு செய்து மகள் ரம்யா பாண்டியனை கரம்பிடித்ததாக அவரது அம்மா பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.