Connect with us

இலங்கை

காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Published

on

Loading

காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

தினம் ஓர் ஆப்பிளை சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம் என்று சொல்வார்கள். அதே போன்று ஆப்பிளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

ஆப்பிள்கள் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதனால் மலச்சிக்கல் தடுக்க உதவுகிறது. ஆப்பிளில் இருக்கும் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான இது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்கிறது. இவை செரிமானம் மற்றும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் இரண்டையும் ஆதரிக்க செய்கிறது. நாள் முழுவதும் உணவு செரிமானம் ஆக காலை உணவில் ஆப்பிள் சேர்ப்பது நன்மை அளிக்க கூடியதாக இருக்கும்.

Advertisement

இதய ஆரோக்கியத்தில் சிவப்பு ஆப்பிள்கள் சிறந்த ஒன்றாக இருக்கும். இவற்றில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதய நோய் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால் இதயத்துக்கு நன்மை கிடைக்கும். மேலும் இரத்த நாள சுவர்களின் புறணியில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கும் வகையில் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செயல்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க செய்வதால் காலை நேர உணவில் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆப்பிளில் உள்ள அதிக நார்ச்சத்து மனநிறைவு உணர்வை மீட்டெடுக்க செய்கிறது. இதனால் நாளின் இடையில் நொறுக்குத்தீனிகள் பக்கம் ஆர்வம் போகாது. இதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் உடல் பருமன் இருப்பவர்கள் உடல் எடை குறையவும் வாய்ப்புண்டு. சிவப்பு ஆப்பிள்கள் காலை உணவில் சேர்க்கும் போது எடை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும். ஆப்பிளில் காணப்படும் நார்ச்சத்து நிறைவாக உணர வைக்கிறது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் சில கிலோ வரை எடை குறைய ஆப்பிள் உடன் நாளை தொடங்கலாம்.

ஆப்பிள் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். இது நுரையீரல் அழற்சி தொடர்பான ஆஸ்துமா அலர்ஜியை கட்டுப்படுத்த செய்யும். ஆப்பிள் தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. விலங்குகள் தொடர்பான ஆய்வு ஒன்றில் ஆப்பிள் தோலில் உள்ள Quercetin ( தாவரங்களில் காணப்படும் ஃப்ளவனாய்டு) ஆனது ஒவ்வாமை அழற்சி நோய்களை கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சைனஸ் மற்றும் ஆஸ்துமா இரண்டுமே கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

Advertisement

ஆப்பிளில் ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதன் நன்மைகளில் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் உணவுகுழாய் செரிமானம் தொடர்பான புற்றுநோய் அபாயம் குறைக்கப்படுகிறது. ஆப்பிளில் உள்ள ஃபாலிபினால்கள் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கின்றன. கூடுதலாக ஆய்வு ஒன்றின் படி பெண்கள் சிவப்பு ஆப்பிள் அதிகமாக உட்கொண்ட நிலையில் புற்றுநோயால் இறப்பு என்பது குறைந்துள்ளது. ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆனது புற்றுநோய் அபாயத்தை குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன