Connect with us

இந்தியா

கேரளா ஒரு மினி பாகிஸ்தான், ராகுல், பிரியங்காவுக்கு பயங்கரவாதிகள் வாக்கு – மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு

Published

on

Maharashtra BJP Minister Nitish

Loading

கேரளா ஒரு மினி பாகிஸ்தான், ராகுல், பிரியங்காவுக்கு பயங்கரவாதிகள் வாக்கு – மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு

கேரளாவை “மினி-பாகிஸ்தான்” என்று அழைத்த மகாராஷ்டிராவின் பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானே, “அனைத்து பயங்கரவாதிகளும்” காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவுக்கு வாக்களிக்கிறார்கள்” என்று தென் மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.ஆங்கிலத்தில் படிக்க: BJP’s Nitesh Rane: Kerala a mini-Pakistan, terror vote for Rahul, Priyanka Gandhiபுனேவின் புரந்தர் தாலுகாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிதேஷ் ரானே மராத்தியில் கூறினார்: “கேரளா ஒரு மினி-பாகிஸ்தான்… அதனால்தான் ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அனைத்து பயங்கரவாதிகளும் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இதுதான் உண்மை, நீங்கள் கேட்கலாம். தீவிரவாதிகளை அழைத்துச் சென்று எம்.பி.க்களாகிவிட்டனர்” என்றார்.திங்கள்கிழமை அவர் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது, ​​மாநிலத்தில் மீன்வளம் மற்றும் துறைமுகத் துறைகளை வைத்திருக்கும் ரானே, கேரளாவில் இந்துக்களின் மத மாற்றம் மற்றும் “லவ் ஜிஹாத்” பிரச்சினையை மட்டுமே எழுப்ப முயன்றதாகக் கூறினார்.“கேரளா நம் நாட்டின் ஒரு பகுதி. இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருவது அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று. இந்துக்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மதமாற்றம் செய்வது அங்கு அன்றாட நிகழ்வாகி வருகிறது. அங்கும் லவ் ஜிகாத் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன… பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படும் விதத்துடன் நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தேன். கேரளாவிலும் இதே நிலை ஏற்பட்டால், அதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய இந்து ராஷ்டிரம் ஒரு இந்து ராஷ்டிராவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும், இந்துக்கள் எல்லா வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும்… அனைவருக்கும் நிலைமை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் நான் உண்மைகளைக் கூறினேன். நான் எதைச் சொன்னாலும் அது உண்மைகளின் அடிப்படையிலானது… எதிர்க்கட்சிகளும், காங்கிரஸும் நான் கூறியடை தவறு என நிரூபிக்கட்டும்,” என்றார்.ராகுல் மற்றும் பிரியங்கா பற்றிய தனது கருத்துக்களில் உறுதியாக இருப்பதாகக் கூறிய நிதேஷ் ராணே கூறினார்: “உள்ளூர் பா.ஜ.க தலைமை என்ன சொல்கிறது என்பதை நான் சொன்னேன், அங்கு அவர்களுக்கு (ராகுல் மற்றும் பிரியங்கா) ஆதரவளிக்கும் நபர்கள் மற்றும் அமைப்புகள் யார் என்பதை யார் வேண்டுமானாலும் சரிபார்க்கலாம். நாம் தவறு செய்கிறோம், தேர்தலில் தங்களை ஆதரிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு கூட இல்லை என்று காங்கிரஸ் வெளியே வந்து சொல்ல முடியுமா? அவர்கள் சொல்லட்டும், பிறகு இன்னும் ஆதாரம் தருவோம். நான் என்ன சொன்னாலும் அது ஆதாரத்தின் அடிப்படையில் தான். காங்கிரஸ் தலைமையின் கீழ் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும்” என்றார்.ரானேவிவின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-விடம் இருந்து திங்கள்கிழமை விளக்கம் கோரியது. “நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அப்படியே காப்போம் என்று சபதம் செய்துதான் நிதேஷ் ரானே அமைச்சரானார். ஆனால், அவர் கேரளாவை மினி பாகிஸ்தான் என்றும், எதிர்க்கட்சிகளின் வாக்காளர்களை பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்துகிறார். இந்த நபருக்கு அமைச்சரவையில் நீடிக்க ஏதேனும் உரிமை உள்ளதா” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே கூறினார். இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வும், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.“கேரளாவை பாகிஸ்தான் என்று ஒரு அமைச்சர் சொன்னால், மத்திய அரசின் பங்கு என்ன? அது என்ன செய்கிறது” என்று காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார் கூறினார்.  “அவர் பேசியது இந்திய அடையாளத்தின் மீதான தாக்குதலாகும், ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு வாக்களித்த வாக்காளர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது வாக்காளர்களை அவமதிப்பதாகும்” என்று அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன