Connect with us

சினிமா

‘சித்ரா அறையிலேயே பண்ணிட்டாரு என் வீடு சுடுகாடு ஆகிடுச்சே’- கதறிய தாயார்!

Published

on

Loading

‘சித்ரா அறையிலேயே பண்ணிட்டாரு என் வீடு சுடுகாடு ஆகிடுச்சே’- கதறிய தாயார்!

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத் செய்த கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில், சித்ராவின் கணவரை போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 31) காலை திருவான்மியூரிலுள்ள சித்ராவின் வீட்டில் அவரின் தந்தை காமராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் அறையிலேயே அவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளது இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த சம்பவம் நடிகை சித்ராவின் தாயார் விஜயா கடும் மன வேதனையில் ஆழ்ந்துள்ளார்.

இது குறித்து விஜயா கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘காலை 4 மணிக்கு நான் அவரை பார்த்தேன். எதுவுமே என்கிட்ட சொல்லலையே. ஆனால், விடிஞ்சதுக்கு அப்புறம் இப்படி பண்ணிக்கிட்டாரு. எனக்கு ஒரே பெண்ணுதான். என் பொண்ணையும் சாவடிச்சிட்டான். இப்போ, என் கணவரும் என்னை அனாதையை விட்டுட்டு போயிட்டாரு. எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம். எங்க வீட்டுக்குள்ள எந்த நேரத்துல அவன் வந்தானு தெரியலையே.

அவனால எங்க வீடே சுடு காடா ஆயிட்டு. இன்னும் யார் யாரையெல்லாம் சாகடிக்கப் போறானு தெரியலையே. என் புள்ள தூண் மாதிரி இருந்தாள். அவளை விட நான் அவனை தான் நம்பினேன். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டான். எப்போ, திருவள்ளூர் நீதிமன்றத்தில் அந்த தீர்ப்பு வந்துச்சோ. அப்போதே என் கணவர் சாப்படுறதையே விட்டுட்டாரு. சோறு, தண்ணினு எதுலயுமே அவர் சாப்பிடவே மறுத்துட்டுதான் இருந்தாரு. நான்தான் அவரை தேற்றி தேற்றி சாப்பிட வச்சேன். அப்படியும் இப்படி ஆகி விட்டதே ‘ என்று கதறினார்.

Advertisement

சித்ராவின் தந்தைக்கு தற்போது64 வயதாகிறது. மகளை இழந்து 4 ஆண்டுகளில் கணவரையும் இழந்து விஜயா தனிமரமாக நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்கம்பக்கத்தினர் சித்ராவின் தாயாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

யார் அந்த சார்? அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றுகிறார்கள் : எடப்பாடி குற்றச்சாட்டு!

தடையை மீறி போராட்டம் : சீமான் கைது!

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன