Connect with us

இலங்கை

தளபதிகளுக்கு பதவி நீடிப்பு இல்லை, இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்!

Published

on

Loading

தளபதிகளுக்கு பதவி நீடிப்பு இல்லை, இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்!

இலங்கையின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தளபதிகளுக்கு பதவி நீடிப்பு அளிப்பதில்லை என அனுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தீர்மானித்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி (இன்று) பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளவர்களுக்கு மாத்திரமல்ல இனி எவருக்கும் பதவி நீடிப்பு அளிக்கப்படமாட்டாது என புதிய அரசு தீர்மானித்துள்ளது.

Advertisement

தற்போது இராணுவத் தளபதியாக இருக்கும் லெப்டினெண்ட் ஜெனரல் விகும் லியனகே மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இரண்டாவது பதவி நீடிப்பு காலத்தில் இருந்ததோடு அவர்களின் பதவிக்காலம் நாளைய தினத்துடன் (டிசம்பர் 31) முடிவுக்கு வருகிறது.

இதேவேளை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச முதலாவது பதவி நீடிப்பு காலத்தில் உள்ளார். எனினும் அவர்கள் அனைவரது பதவிக் காலமும் நாளைய தினம் (டிசம்பர் 31) முடிவுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது.

இதற்கமைய புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (டிசம்பர் 30) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

முப்படை தளபதிகளுக்கு பதவி நீடிப்பு வழங்குவது அவர்களுக்கு அடுத்த படிநிலையிலுள்ள அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக உள்ளது என்று தொடர்ச்சியாக கவலைகளும் விமர்சனங்களும் எழுந்தன. எனினும் அவற்றை புறந்தள்ளி மகிந்த ராஜபக்ச தொடக்கம் ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்கவரை அனைத்து ஜனாதிபதிகளும் படைப் பிரதானிகளுக்கு பதவி நீட்டிப்பை வழங்கினர்.

இதேவேளை தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவும் ஓய்வு பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

நாட்டில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற மிகவும் மோசமான பயங்கரவாதச் சம்பவமாக கூறப்படும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இடம்பெற்ற பிறகு, அவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்னர் பதவியில் இருந்த சிசிர மெண்டிஸ், தேசிய தௌஹீத் ஜமாத் நடத்திய அந்த பயங்கரவாத சம்பவத்தை தடுக்க தவறிவிட்டார் என உச்சநீதிமன்றத்தின் குற்றச்சாட்டை அடுத்து குலதுங்க தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நாட்டின் பாதுகாப்புத் துறையின் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பதவி ?”
,ஃநீடிப்பு தொடர்பில், அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேவேளை கடந்த காலங்களில் படைகளிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு இராஜதந்திர பதவிகளுக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனவும் அரசு தரபு கூறுகிறது. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இராஜதந்திர தூதரகப் பொறுப்பில் நியமிக்கபட்டிருந்த முன்னாள் படைத் தலைவர்கள் திருப்பி அழைக்கப்பட்டனர்.

Advertisement

அப்படியாக நியமிக்கப்பட்ட கடற்படையின் மூன்று முன்னாள் தளபதிகள் அனுர அரசால் திருப்பி அழைக்கப்பட்டனர். அவ்வகையில் இந்தோனேசியாவுக்கான தூதுவர் ஜயந்த் கொலம்பகே, பாகிஸ்தானுக்கு தூதுவராக இருந்த ரவி விஜேகுணரட்ண மற்றும் கியூபாவில் இலங்கைத் தூதுவராக இருந்த நிலாந்த உலுகதென்ன ஆகியோர் நாடு திரும்பும்படி பணிக்கப்பட்டனர்.

அதேபோன்று நேபாளத்திற்கான தூதுவராக இருந்த விமானப்படையின் முன்னாள் தளபதி சுதர்சன பதிரணவும் திருப்பியழைக்கப்பட்டார்.

தேசிய மக்க சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் தலைவராக கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே உட்பட பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement

முன்னர் இருந்த அரசாங்கங்கள் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட மற்றும் பாரிய குற்றச் சம்பவங்களை தடுக்க தவறியவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டவர்களுக்கு பதவிகளை வழங்கியது என்பதும் கவனிக்கத்தக்கது.

மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச காலத்தில் மிகவும் செல்வாக்குடனும், தொடர்ச்சியாக பதவி நீட்டிப்புகளையும் பெற்ற சவேந்திர சில்வா பின்னர் ரணில் ஆட்சியிலும் முப்படைகளின் பிரதானி என்ற பதவி நீட்டிப்பையும் பெற்றார்.

அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் முப்படைகளின் பிரதானி என்ற பதவியும் ஒழிக்கப்படுவதாக அரச தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வந்துள்ளன.

Advertisement

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறப்பு படையணிகளுக்கு சவேந்திர சில்வாவைப் போன்றே தலைமையேற்றிந்த கமல் குணரட்ணவுக்கும் பதவி நீட்டிப்பும் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டு அந்த பதவியும் மஹிந்த மற்றும் கோட்டாபய அரசுகளால் நீட்டிக்கப்பட்டது

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன