இலங்கை
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டிய இருவருக்கு நேர்ந்த கதி!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டிய இருவருக்கு நேர்ந்த கதி!
தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை நேற்றையதினம் (30-12-2024) பிங்கிரிய ஆடைத் தொழிற்சாலை வளாகத்தில் வைத்து கிரிமினல் முறையில் மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பதில் நீதவான் ஏ. சி. ஏ. சலாம் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க குளியாபிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
