சினிமா
நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை… மகளை இழந்த துக்கம் காரணமா?
நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை… மகளை இழந்த துக்கம் காரணமா?
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை சென்னையிலுள்ள அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ,இது தொடர்பாக, சித்ராவின் காதல் கணவர், ஹேம்நாத் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
ஆனால், ஹேம்நாத் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேம்நாத் உள்ளிட்டவர்கள் விடுதலையானார்கள்.
மகள் மறைந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் இன்று காலை கதவை திறக்காததால் அவரது மனைவி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது காமராஜ் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.
உடனடியாக இதுகுறித்து திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற போலீசான இவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஒரு வேளை மகளின் மறைவு காரணமாக அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்திருக்லாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காமராஜ் உடலை போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் : எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்?
வேலைவாய்ப்பு : மீன் வள பல்கலையில் பணி!