Connect with us

இந்தியா

’மற்றவரின் டூ வீலரை ஓட்டுபவருக்கும் தனிநபர் காப்பீடு பொருந்தும்’ – மதுரை நீதிமன்றம் அதிரடி!

Published

on

Loading

’மற்றவரின் டூ வீலரை ஓட்டுபவருக்கும் தனிநபர் காப்பீடு பொருந்தும்’ – மதுரை நீதிமன்றம் அதிரடி!

புதுக்கோட்டையை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் தந்தையின் இரு சக்கரவாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்துள்ளார். விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது வாகனத்துக்கு அண்ணாமலை 15 லட்சத்துக்கு தனிநபர் விபத்து காப்பீடு எடுத்துள்ளார்.

விபத்து தொடர்பாக காப்பீடு நிறுவனத்தின் இன்சூரன்ஸ் தரும்படி கேட்ட போது, அண்ணாமலைக்கு மட்டும்தான் காப்பீடு பொருந்தும் என்று கூறி, இன்சூரன்ஸ் தொகையை தர நிறுவனம் தர மறுத்துள்ளது. இதையடுத்து, அண்ணாமலை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ”மனதாரரின் மகன் வாகனத்தின் உரிமையாளர் அல்ல என்று கூறி இன்சூரன்ஸ் தொகையை தர காப்பீடு நிறுவனம் மறுத்துள்ளது. தனிநபரின் விபத்து காப்பீட்டின்படி, உரிமையாளர் மற்றும் டிரைவர் இருவருமே காப்பீடு பெற தகுதியானவர்கள் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறந்தவர் மனுதாரரின் மகன் என்பதால், காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற தகுதியுள்ளது. வாகன உரிமையாளரிடம் இருந்தோ அல்லது அனுமதிக்கப்பட்ட பிற நபர்களிடத்தில் இருந்து வாகனத்தை பெற்று ஓட்டுபவருக்கோ தனிநபர் விபத்து காப்பீடு பொருந்தும். இதனால், 15 லட்சத்தை 6 சதவிகித வட்டியுடன் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

குமரி கண்ணாடி கூண்டு பாலம் – அதிமுகவின் திட்டம் : எடப்பாடி பழனிசாமி

Advertisement

எ.வ.வேலு முதல் தங்கம் தென்னரசு வரை : அமைச்சர்களை பாராட்டிய ஸ்டாலின்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன