சினிமா
முன்னாள் மனைவி, மகனுடன் புத்தாண்டு கொண்டாட்டம்!! வைரலாகும் நடிகர் ஹிருத்திக் ரோஷன் புகைப்படங்கள்..
முன்னாள் மனைவி, மகனுடன் புத்தாண்டு கொண்டாட்டம்!! வைரலாகும் நடிகர் ஹிருத்திக் ரோஷன் புகைப்படங்கள்..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஹிருத்திக் ரொஷன் கடந்த 2000ஆம் ஆண்டு ஆடைவடிவமைப்பாளரான சுசன்னே கான் என்பவரை திருமணம் செய்து இரு மகன்களை பெற்றெடுத்தனர். அதன்பின் 2013ல் பிரிவதாக அறிவித்து 2014ல் விவாகரத்து பெற்றனர்.ஹிருத்திக் அதன்பின் சபா அசாத் என்ற நடிகையுடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். சுசன்னேவும் தன் காதலருடன் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் தன்னுடைய முன்னாள் மனைவி சுசன்னே மற்றும் மகன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாக்கு சென்று அங்கு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.அவர்களுடன் சுசன்னேவின் காதலரும் இருப்பதை பார்த்த பலரும் என்னதான் விவாரத்து பெற்று ஹிருத்திக் பிரிந்தாலும் நட்போடு முன்னாள் மனைவியுடன் இருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
