சினிமா
லைகா நிறுவனம் எடுத்த திடீர் முடிவு..! அதிர்ச்சியில் திரைத்துறையினர்..

லைகா நிறுவனம் எடுத்த திடீர் முடிவு..! அதிர்ச்சியில் திரைத்துறையினர்..
இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளது.இந்த ஆண்டு வெளியாகிய இந்தியன் 2,வேட்டையன் போன்ற படங்களை தயாரித்துள்ளதுடன் இரு படங்களும் எதிர் பார்த்த அளவுக்கு வசூலினை சம்பாதிக்காமையினால் லைகா நிறுவனம் பாரிய இன்னலை சந்தித்துள்ளது.இதன் காரணமாக லண்டனில் அமைந்துள்ள இதன் தலைமை அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட 90 சதவீத பணியாட்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்பட வெளியீட்டிற்கு ஒரு பிரச்சனையாக அமைந்துள்ளதுடன் இப் பட பொங்கல் வெளியீடு தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.அது மட்டுமல்லாமல் இந்தியன் 2 தோல்வியின் காரணமாக ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டிற்கு லைகா நிறுவனம் ரெட் கொடுத்து கவுன்சிலிங்குக்கு புகார் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.