Connect with us

இலங்கை

விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்த கோரிக்கை!

Published

on

Loading

விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்த கோரிக்கை!

விவசாயிகளுக்கு இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்காக வழங்கப்பட்ட 40,000 ரூபா இழப்பீட்டுத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

Advertisement

விவசாயிகள் இந்த அரசாங்கத்தில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு நான் விவசாய அமைச்சராக பதவியேற்றபோது வழங்கப்பட்ட 40,000 ரூபா கொடுப்பனவே தற்போதும் வழங்கப்படுகிறது. 

மேலும் இது தற்போதைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் என செய்தியும் வெளியிடப்பட்டதுடன் 

Advertisement

இந்த அரசாங்கத்துக்கு உர மானியத்தைக் கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் 

எமது அரசாங்கத்தில் உர மானியம் 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது எனவும்  தெரிவித்துள்ளார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன