Connect with us

இலங்கை

2024இல் உலகில் கவனம் ஈர்த்தவர்களில் ஜனாதிபதி அனுரவும் இடம்​பிடிப்பு!

Published

on

Loading

2024இல் உலகில் கவனம் ஈர்த்தவர்களில் ஜனாதிபதி அனுரவும் இடம்​பிடிப்பு!

 2024இல் உலகில் கவனம் ஈர்த்தவர்களில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்கவும் இடம்​பிடித்துள்ளார்.

நாளையதினம் 2025 ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில் , 2024இல் உலகில் கவனம் ஈர்த்த 10 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது.அதன்படி,

Advertisement

 அமெரிக்க  புதிய  ஜனாதிபதி  டிரம்ப்

2020 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து, அதிருப்தியுடனும் ஆர்ப்பாட்டத்துடனும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய டொனால்டு டிரம்ப், “மீண்டும் ஜனாதிபதியாவேன்” எனச் சபதமிட்டு, 2024இல் அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார். குடியேற்றக் கொள்கையில் மாற்றம், இறக்குமதி வரி அதிகரிப்பு என இப்போதே உலக நாடுகளுக்குக்  கிலையையும் ஏற்படுத்தி வருகின்றார்.

வங்கதேச ஷேக் ஹசீனா

Advertisement

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில், ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கவிழ்ந்தது. வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் அந்நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. அது இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரையும் பாதித்திருக்கிறது.  

 இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

2024 செப்டம்பரில் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) வேட்பாளராகப் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி ஆச்சரியம் தந்தது. பாராளுமன்றத் தேர்தலில் அவர் கட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்தது. 

Advertisement

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசுக் கருவூலத்திலிருந்த பரிசுப் பொருள்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் வீட்டுச் சிறைக்கு மாற்றப்படுவார் எனப் பேசப்பட்டது. இம்ரான் கான் அதற்கு மறுத்துவிட்டார்.

Advertisement

 பிரான்ஸ் ஜனாதிபதி  மக்ரூன்

டிசம்பர் 13இல், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியே பதவியிழந்தார். பிராங்சுவா பைரூஸ் பிரதமரானார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரூனின் பரிந்துரையில் பிரதமரான பார்னியேவின் பதவி பறிபோனதால், மக்ரூனுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், “2027 வரை நான்தான் ஜனாதிபதி என்று சூளுரைத்திருக்கிறார் மக்ரூன்.

 எலான்  மஸ்க் 

Advertisement

2024ஆம் ஆண்டின் மிகப் பெரிய செல்வந்தர் என்று ‘ஃபோர்ப்ஸ்’ இதழால் இலான் மஸ்க் அறிவிக்கப்பட்டார். இவரது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட்டுகள் 134 முறை விண்ணில் ஏவப்பட்டன. இவரது ‘எக்ஸ்.ஏஐ’ நிறுவனத்தின் தயாரிப்பான ‘அரோரா’வும் வரவேற்பைப் பெற்றது. இவரது ஆதரவு பெற்ற டிரம்ப் ஜனாதிபதித் தேர்தலில் வென்றுவிட்டார். எனினும், மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளத்தில் வெறுப்புணர்வு அதிகரித்ததாகச் சொல்லி, ஜனநாயகவாதிகள் பலர் அதிலிருந்து வெளியேறினர்.


ஓபன் ஏஐ  நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்

மனிதகுல வளர்ச்சியைவிடவும் லாபத்துக்கே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மீது, அந்நிறுவனத்தின் முன்னாள் நிறுவனரான இலான் மஸ்க் குற்றம்சாட்டினார். ‘ஓபன் ஏஐ’ நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறுவதாக விமர்சித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசிர் பாலாஜி மர்மமாக இறந்தது இன்னொரு சர்ச்சையானது.

Advertisement

 சுனிதா வில்லியம்ஸ்

ஒரே வாரத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லி, ‘ஸ்டார் லைனர்’ விண்கலத்தில் ஜூன் 6இல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சென்ற நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் தொழில் நுட்பக் கோளாறுகளால் இன்றுவரை பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இந்தப் புதிய ஆண்டிலாவது சுனிதா மண்ணில் இறங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால்

Advertisement

விம்பிள்டன், ஃபிரெஞ்சு ஓபன், யு,எஸ்.ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் என 22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், டென்னிஸில்லிருந்து ஓய்வுபெற்றது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விமர்சனங்களுக்குள்ளான சவுதி அரேபியாவின் டென்னிஸ் தூதராகப் பொறுப்பேற்றதால் சர்ச்சைக்குள்ளானார்.

 பிரிட்டிஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி

விண்வெளி முதல் காலநிலை மாற்றம் வரை பேசிய ‘ஆர்பிட்டல்’ நாவலுக்காக பிரிட்டிஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி ‘புக்கர்’ பரிசை வென்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு, தென் கொரிய எழுத்தாளரான ஹன் காங்குக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை வென்ற முதல் ஆசியப் பெண் இவர்தான்!   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன