Connect with us

சினிமா

அசிங்கமா பேசினவனெல்லாம் லைன்ல வாங்கடா.. அஜித் ரசிகர்களுக்கு அந்தணன் சாட்டையடி

Published

on

Loading

அசிங்கமா பேசினவனெல்லாம் லைன்ல வாங்கடா.. அஜித் ரசிகர்களுக்கு அந்தணன் சாட்டையடி

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனாலும் இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் லைக்கா நிறுவனமும் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகாது என்று வலைப்பேச்சு அந்தணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் கடுமையாக திட்ட, அதன்பின்பு லைக்கா நிறுவனத்தின் அறிக்கையை பார்த்து பலரும் ஆடிப் போனார்கள்.இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் வழங்கிய பேட்டியில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் மனம் திறந்து பேசி உள்ளார்.. தற்போது அவருடைய பேட்டி வைரலாகி வருகின்றது.d_i_aஅதன்படி அவர் கூறுகையில், எங்களுக்கு எல்லா தரப்பிலிருந்தும் தகவல்கள் வரும். லண்டனில் இருந்து கூட தகவல் சொல்வதற்கு ஆட்கள் உள்ளனர். விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதை சொன்னதுமே அஜித் ரசிகர்கள் பலர் எங்களை திட்ட தொடங்கினார்கள்.ஆனால் நாம் தகவல் வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் லைக்கா நிறுவனமே விடாமுயற்சி திரைப்படம்  பொங்கலுக்கு ரிலீசாகாது என்று அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. நாம் எப்போதும் உண்மையைத்தான் சொல்லுகின்றோம்.அஜித், விஜய் ரசிகர்கள் நாம் எப்போதும் அவர்களைப் பற்றி பாசிட்டிவாக பேச வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். நாங்கள் ஒரு முறை அவர்களை பாராட்டி பேசினால் இன்னொரு முறை அவர்களை விமர்சிப்பதற்கும் தயங்க மாட்டோம். இது நமது சேனலை பார்ப்பவர்களுக்கு தெரியும்.விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அதற்கான சென்சரும் எடுப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லை. இவ்வாறு பல காரணங்களின் அடிப்படையில் தான் இந்த படம் வெளியாகாது என்று தெரிவித்திருந்தோம்.. அதன்பின்பே நானும் எனது டுவிட்டர் பக்கத்தில் திட்டினவங்க எல்லாம் லைன்ல வாங்க என்று டுவிட் போட்டேன் என கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன