இலங்கை
இன்று ஆரம்பமாகும் பாடசாலை!

இன்று ஆரம்பமாகும் பாடசாலை!
2024ம் ஆண்டின் அரச மற்றும் அரச அங்கீகாரம் தனியார் பாடசாலைகளில் மூன்றாவது தவணை கல்வி நடவடிக்கைகளின் இறுதி கட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 24ம் திகதி வரை 3ம் தவணையின் 3ம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
பாடசாலை ஆரம்பமாகும் நிலையில் நாளை முதல் இறுதி தவணைக்கான பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான முதலாம் கல்வி தவணை ஜனவரி மாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் 2025ம் ஆண்டின் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய செயற்பாடு ஜனவரி 30ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.