இலங்கை
ஈ-டிரபிக்’ செயலி அறிமுகம்

ஈ-டிரபிக்’ செயலி அறிமுகம்
போக்குவரத்து விதிமீறல்கள், குற்றச் செயல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக எளிதில் பொதுமக்கள் முறைப்பாடு அளிப்பதற்கு ஏதுவாக ’ஈ-டிரபிக்’ (E-Traffic) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயலியின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஒளிப்படங்கள், காணொலிகள் மற்றும் விரிவான தகவல்களை சட்ட நடைமுறைக்காக நேரடியாகப் பதிவேற்றவும், முறைப்பாடளிக்கும் செயல்முறையை நெறிப்படுத்தவும், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தச் செயலி பொதுமக்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.