இலங்கை
ஜனாதிபதி, பிரதமருக்கே ‘ மட்டுமே எஸ்.ரி.எப்.’ பாதுகாப்பு!

ஜனாதிபதி, பிரதமருக்கே ‘ மட்டுமே எஸ்.ரி.எப்.’ பாதுகாப்பு!
இலங்கையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இனிவரும் நாள்களில் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு இறுதிப்போரின் போதும், அதற்குப் பின்னரும் அமைச்சர்கள் பலருக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. எனினும், தற்போது எவருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்பதால் ஜனாதிபதி மற்றும் பிரதமரைத் தவிர வேறு எவருக்கும் விசேட அதிரடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (ப)