இலங்கை
நாமல் குமார நேற்று கைது!

நாமல் குமார நேற்று கைது!
சமூக செயற்பட்டார் என்று கூறப்படும் நாமல் குமார என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டநிலையில், அவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயருக்குக் களங்களம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடங்களில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவுகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நாமல் குமார கைது செய்யப்பட்டிந்தார்.
சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றுக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நாமல் குமார, வாக்குமூலம் வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.