சினிமா
புதிய ஆண்டில் புதிய பயணத்துக்கு தயாரான அன்ஷிதா.! வேற லெவலில் களமிறங்கிட்டாங்களே!

புதிய ஆண்டில் புதிய பயணத்துக்கு தயாரான அன்ஷிதா.! வேற லெவலில் களமிறங்கிட்டாங்களே!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அன்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லமா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக காணப்பட்டார்.கடந்த வாரம் இடம்பெற்ற டபுள் எலக்ஷனில் அன்ஷிதா எலிமினேட் ஆகியிருந்தார். ஆனாலும் இவர் கொஞ்சம் கூட வருத்தப்படாமல் சந்தோஷமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.அதற்குக் காரணம் தன்மீது உள்ள நெகட்டிவ் விமர்சனங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டது என்பதால் தான். அதனை விஜய் சேதுபதியும் பிக்பாஸ் மேடையில் வைத்து தெரிவித்திருந்தார். இதனாலேயே அன்ஷிதா மிகுந்த சந்தோஷத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.இந்த நிலையில், புது வருட பிறப்பை முன்னிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அன்ஷிதா. மேலும் அதில் தன்னுடன் இதுவரையில் கூட இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து புதிய ஆண்டு புதிய பயணத்துக்கு தயாராகியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.