Connect with us

இலங்கை

எழும்பு மஜ்ஜை சிகிச்சைகளுக்காக மஹரகமவில் புதிய மருத்துவமனை!

Published

on

Loading

எழும்பு மஜ்ஜை சிகிச்சைகளுக்காக மஹரகமவில் புதிய மருத்துவமனை!

இலங்கை விமானப்படையின் பங்களிப்பு மற்றும் ருஹுணு கதிர்காமம் மஹா தேவாலாவின் நிதி அனுசரணையுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான எலும்பு மஜ்ஜை (bone marrow) மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு மஹரகம அபெக்ஷய மருத்துவமனையில் திறந்துவைப்பு.

ருஹுணு மகா கதிர்காம விகாரையின் நிதியுதவி மற்றும் இலங்கை விமானப்படையின் முழு உழைப்பு மற்றும் பங்களிப்புடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அரச மருத்துவமனையில் கட்டப்பட்ட முதலாவது மற்றும் ஒரேயொரு எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணு மாற்று சிகிச்சை பிரிவின் திறப்பு வைபவம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, விமானப்படைத் தலைவர் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் பங்களிப்பில் (02, ஜனவரி 2025) மஹரகம அபேக்ஷ மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது.

Advertisement

மஹரகம அபேக்ஷ மருத்துவமனையின் சிறுவர் வார்டுகளில் சிறுவர்களுக்கான இடப்பற்றாக்குறை காரணமாக ருஹுனு மஹா கதிர்காம விகாரையின் பஸ்நாயக்க நிலமே திரு.திஷான் குணசேகர மஹரகம அஷர்ஷா மருத்துவமனையில் மூன்று மாடிகளைக் கொண்ட வார்டு வளாகத்தை நிர்மாணிக்க முன்வந்து 2023 ருஹுனு மகா கதிர்காமம் ஆலய நிதியத்தின் நிதி அனுசரணையுடன்.

அந்த திட்டத்திற்கு விமானப்படையின் உழைப்பு பங்களிப்பு காரணமாக, மூன்று அடுக்கு வார்டு வளாகம் நான்கு அடுக்கு வார்டு வளாகமாக கட்டப்பட்டு 2024 இல் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு கட்டப்பட்ட நான்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வின் நம்பிக்கை வழங்கும் வகையில் ஒரு புதிய எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு நிறுவப்பட்டது .

Advertisement

இதன்போது எதிர்கால பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை விமானப்படையின் பங்களிப்பை வழங்குவதற்கு விமானப்படைத் தளபதி தனது உடன்பாட்டை வெளிப்படுத்தினார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன