இந்தியா
புத்தாண்டில் உச்சம் தொட்ட தங்கம் விலை… நகை பிரியர்கள் ஷாக்!

புத்தாண்டில் உச்சம் தொட்ட தங்கம் விலை… நகை பிரியர்கள் ஷாக்!
புத்தாண்டு முதல் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் 3வது நாளாக இன்றும் (ஜனவரி 3) அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7,260-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ. 58,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.87 உயர்ந்து ரூ.7,920-க்கும், ஒரு சவரன் ரூ.696 உயர்ந்து ரூ. 63,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ ரூ.2000 குறைந்து ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புத்தாண்டு பிறந்தது முதல் தொடர்ந்து 3வது நாளாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.