Connect with us

பொழுதுபோக்கு

மகளின் பிறந்த நாள்: பிரபல நடிகருடன் கொண்டாட்டத்தில் அஜித் குடும்பம்; வைரல் க்ளிக்ஸ்

Published

on

ajith anosha

Loading

மகளின் பிறந்த நாள்: பிரபல நடிகருடன் கொண்டாட்டத்தில் அஜித் குடும்பம்; வைரல் க்ளிக்ஸ்

நடிகர் அஜித்குமார் – ஷாலினி தம்பதியின் மகளாக அனோஷ்கா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் அஜித்- ஷாலினி. அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஷாலினி-அஜித் இருவரிடையே காதல் ஏற்பட திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்இதனிடையே சமீபத்தில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கிய நடிகை ஷாலினி, அஜித் மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், நடிகை ஷாலினி சிறுவயதில் எடுக்கப்பட்ட தனது மகள் அனோஷ்காவின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ‘மை பேபி’ என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தில் ஷாலினி தனது மகள் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போல் வெளியிட்டார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அதன்பிறகு, ஷாலினி தனது மகள் புகைப்படங்களை வெளியிட்டபோது, அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் மகள் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வந்தனர். அந்த அளவிற்கு, அனோஷ்கா தனது அம்மா ஷாலினியை விடவும் உயரமாக வளர்ந்துள்ளார். இதனிடையே இன்று அனோஷ்கா தனது பிறந்த நாளை கொணடாடுகிறார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.A post shared by 𝐓𝐇𝐀𝐋𝐀 𝐁𝐀𝐑𝐀𝐓𝐇 🔵 (@thala.barath._)இந்த புகைப்படத்தில், அஜித் – ஷாலினி தம்பதி, மகன், ஆத்விக் ஆகியோருடன், ஷாலினியின் அண்ணனும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷியும் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அஜித் மற்றும் ஷாலினியின் ரசிகர்கள் பலரும் அனோஷ்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன