இலங்கை

மாரடைப்பால் உயிரிழந்தவரை உயிர்பிழைக்கவைத்த வேகத்தடை!

Published

on

மாரடைப்பால் உயிரிழந்தவரை உயிர்பிழைக்கவைத்த வேகத்தடை!

 இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபா், வேகத்தடையை ஆம்புலன்ஸ் கடந்தபோது உயிா்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கோலாப்பூரின் கசாபா-பவாடா பகுதியில் பாண்டுரங் உல்பே (65) என்பவா் வசித்து வருகிறாா்.

Advertisement

கடந்த டிசம்பா் 16-ஆம் திகதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, சிகிச்சை பலனின்றி பாண்டுரங் உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இதையடுத்து, பாண்டுரங்கின் உடலை அவரது குடும்பத்தினா் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்றனா்.

பாண்டுரங்கின் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியில் உள்ள ஒரு வேகத்தடையில் வாகனம் வேகமாக ஏறி இறங்கியபோது, அவரது விரல்கள் அசைவதை குடும்பத்தினா் கண்டனா்.

Advertisement

இதனையடுத்து உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிா்பிழைத்த அவா், இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாா்.

அதன்பின்னர் அவா் முழுமையாக குணமடைந்து கடந்த திங்கள்கிழமை (டிச.30) வீடு திரும்பினாா்.

இது குறித்து பாண்டுரங் கூறுகையில், ‘கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி, நடைப்பயிற்சிக்குப் பிறகு தனக்கு மயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் அதன் பிறகு எதுவும் நினைவில் இல்லை எனவும் தெரிவித்தாா்.

Advertisement

இந்நிலையில் அவா் உயிரிழந்ததாக அறிவித்த மருத்துவமனை குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கல்லை எனவும் கூறப்படுகின்ற நிலையில் மரணமடைந்ததாக கூறப்பட்டவர் உயிர் பிழைத்த சம்பவம் அங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version