விளையாட்டு
IND vs AUS LIVE Score, 5th Test Day 1: மீண்டும் சொதப்பல்; 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா

IND vs AUS LIVE Score, 5th Test Day 1: மீண்டும் சொதப்பல்; 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் கடைசி போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும். அத்துடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் நீடிக்கும். மறுபுறம், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் பல வருடங்களுக்கு பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை மீண்டும் கைப்பற்றும். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2-வது முன்னேற அதிக வாய்ப்புள்ளது. இந்தியா பேட்டிங்சிட்னியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடங்கி உள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் கே.எல் ராகுலையும் (4), பாட் கம்மின்ஸ் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் (10) விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். அடுத்து சற்று நிதானமாக விளையாடி வந்த ஷுப்மன் கில் 20 ரன்களில் அவுட்டானார். 12 ரன்கள் உடன் விராட் கோலி களத்தில் உள்ளார். இப்போது உணவு இடைவேளை. இந்திய அணி 25 ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழந்து 57 ரன் எடுத்துள்ளது. இந்திய அணியின் ஆடும் லெவன் வீரர்கள்:யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன்: சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்