Connect with us

இந்தியா

அடர் பனி மூட்டம்: டெல்லி விமான நிலையத்தில் சுமார் 50 விமானங்கள் தாமதம்

Published

on

fog

Loading

அடர் பனி மூட்டம்: டெல்லி விமான நிலையத்தில் சுமார் 50 விமானங்கள் தாமதம்

வட இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக காலையில் அடர்த்தியான மூடுபனி நிலவி வருவதால் டெல்லி விமான நிலையத்தில் குறைந்தது 50 விமானங்கள் தாமதமாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மூடுபனி காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படுவதாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. “விமான பயணிகள் புதுப்பிப்புகளுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று ஆலோசனை கூறியுள்ளது.இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளன. இண்டிகோ “மூடுபனி காரணமாக கணிசமாகக் குறைந்த பார்வை நிலையில் உள்ளதாக கூறியது, இது விமான அட்டவணையை பாதிக்கிறது” என்று கூறியது. “அடர்த்தியான மூடுபனி காரணமாக மோசமான பார்வை டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் விமான நடவடிக்கைகளை பாதிக்கிறது” என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.டெல்லியைத் தவிர, ஸ்ரீநகர், சண்டிகர், ஆக்ரா, லக்னோ, அமிர்தசரஸ், ஹிண்டன் மற்றும் குவாலியர் விமான நிலையங்களிலும் விமானங்கள் தாமதமாகின.ஆங்கிலத்தில் படிக்கவும்:Weather Today: Dense fog engulfs North India for second day in row, at least 50 flights delayed at Delhi airportடெல்லிக்கு வரும் 50க்கும் மேற்பட்ட ரயில்களும் தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. 22436 புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது, வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 14 மணி நேரம் தாமதமானது. புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எட்டு மணி நேரம் 17 நிமிடங்கள் தாமதமாகவும், ஆனந்த் விஹார் டெர்மினல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகிறது.டெல்லியில் ஜனவரி 8 வரை கடுமையான மூடுபனி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஜனவரி 6 ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. டெல்லியில் ஜன.4 காலை வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக இருந்தது.ஜன.3 டெல்லி விமான நிலையத்தில் 400 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாயின, பாலம் மற்றும் சஃப்தர்ஜங் நிலையங்களில் காலை 9 மணி வரை அடர் பனிமூட்டத்தால் ஒன்றுமே கண்ணுக்கு தெரியாத நிலையில் நண்பகலுக்கு மேல் மெதுவாக மேம்பட்டன.டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (டயல்) அதிகாரிகள் கூறுகையில், பார்வைத்திறன் குறைந்ததால் குறைந்த தெரிவுநிலையுடன் இணைக்கப்பட்ட நிலையான நடைமுறைகள் ஜன.3 அதிகாலை நடைமுறைக்கு வந்தன. விமான நடவடிக்கைகள் குறித்த தகவல்களுக்கு பயணிகள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.”கேட் 3 தரையிறக்கம் மற்றும் புறப்படும் நெறிமுறைக்கு இணங்கிய விமான நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை” என்று ஒரு அதிகாரி கூறினார். பார்வைத்திறன் குறையும் போது CAT III நெறிமுறை வைக்கப்பட்டுள்ளது, இதனால் விமானங்கள் குறைந்த தெரிவுநிலை நிலைமைகளில் செயல்பட முடியும். இதற்காக விமானிகளுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க வேண்டும்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன