Connect with us

இந்தியா

அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? : கே.பாலகிருஷ்ணனுக்கு சேகர்பாபு பதிலடி!

Published

on

Loading

அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? : கே.பாலகிருஷ்ணனுக்கு சேகர்பாபு பதிலடி!

போராட அனுமதி மறுக்கப்படுவதாக சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜனவரி 4) பதில் அளித்துள்ளார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

இந்த மாநாட்டில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “பாஜகவை வீழ்த்தக்கூடிய போராட்டத்தில் நாங்கள் திமுகவுடன் நிற்போம். ஆனால் தெருமுனை கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றால் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு போடுகிறார்கள்.

நான் முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேட்க விரும்புகிறேன், தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலையை நீங்கள் பிரகடனப்படுத்திவிட்டீர்களா? காவல்துறை ஏன் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டின் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊர்வலம் நடத்தக்கூடாதா? எதிர்க்கட்சிகள் நடத்துகிற போராட்டங்களுக்கும் அனுமதி கொடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரே இவ்வாறு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “அவர் எந்த கண்ணோட்டத்தில் அதை சொன்னார் என்று தெரியவில்லை. ஜனநாயக நாடு இது. கடந்த ஆண்டை கணக்கிட்டுப் பார்த்தால் ஆயிரக்கணக்கான போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்பது கடந்த அதிமுக ஆட்சியில்தான் நிலவியது. இதுவரை அப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரிமாண்ட் செய்யக்கூடிய சூழல் ஏற்படவில்லை. மாறாக அவர்களின் கோரிக்கை என்ன என்று அறிந்து, அதனை நிவர்த்தி செய்து வருகிறோம்” என்று சேகர்பாபு தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன