Connect with us

பொழுதுபோக்கு

எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்: மாமனார் பெரிய சப்போர்ட்; சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Published

on

Sivakarthikeyan Mamana

Loading

எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்: மாமனார் பெரிய சப்போர்ட்; சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தன், தற்போது நேசிப்பாயா என்ற படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.2003-ம் ஆண்டு வெளியான குறும்பு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமகமானவர் விஷ்ணுவர்த்தன். தொடர்ந்து 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற படத்தை இயக்கியிருந்தார். அடுத்து பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம், யச்சன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட, விஷ்ணுவர்த்தன், கடந்த 2021-ம் ஆண்டு இந்தியில் சிறீஷா என்ற படத்தை இயக்கிய நிலையில், தற்போது நேசிப்பாயா என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.அதர்வாவின் தம்பி ஆகாஷ் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தில், அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகாஷின் மாமனார் பிரிட்டோ தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். விஷ்ணுவர்த்தன் இயக்கிய முந்தைய படங்களைபோல், இந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசைமைத்துள்ளார். நேசிப்பாயா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், இந்த படத்தை ஆகாஷின் மாமனார் தயாரித்துள்ளார். அதேபோல் எனக்கு என் மாமனார் ரொம்பவே ஸ்பெஷல். எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். அவர் எனது தாய்மாமா தான். இருந்தாலும் எனக்கு நிரந்தரமான வேலை இல்லை. டிவியில் ஒரு ஷோ பண்ணா, ரூ4500 கிடைக்கும். ஆனால் இப்போது பாலா, இவங்க எல்லாம் நிறைய வாங்குறாங்க. விஜய் டிவி வளர்ந்துடுச்சி. இந்த நிகழ்ச்சிக்கே இவர்கள் எனக்கு தெரிஞ்சி லட்சத்தில் தான் சம்பளம் வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.video va cut panni en maams ku whatsapp la ampchen.. sirichitu heart podraru 😂😂😂 pic.twitter.com/bjiqsiFzB8அப்போலாம் ரூ4500 தான் கொடுப்பாங்க. அப்போ என் மாமனார் என்ன சொன்னார்னா, பரலாயில்லை எதோ ஒன்னு பண்ணணும்னு நினைக்கிறான். மெட்ராஸ் போய் சர்வே பண்றதே கஷ்டம். அவன் சினிமாவுக்கு போகனும்னு நினைக்கிறான் சப்போர்ட் பண்ணுவோம்னு சொன்னாங்க. இன்னைக்கு இந்த மேடையை பார்க்கும்போது என் மாமா மனோகர் மாமாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அவர் தான் தைரியமான எனக்கு சப்போர்ட் பண்ணார் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன