Connect with us

இந்தியா

எந்த தொழிலும் செய்யாத ரங்கசாமி எப்படி 6-வது பணக்கார முதல்வர் – நாராயணசாமி கேள்வி

Published

on

Puducherry Former CM V Narayanasamy talks about pm modi LS Polls 2024 campaign Tamil News

Loading

எந்த தொழிலும் செய்யாத ரங்கசாமி எப்படி 6-வது பணக்கார முதல்வர் – நாராயணசாமி கேள்வி

இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் 6-வது பணக்கார முதலமைச்சர் ரங்கசாமி என மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், எந்த தொழிலும் செய்யாத அவர் எப்படி பணக்கார முதலமைச்சராக வந்தார்? என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நிதி பற்றாக்குறை என கூறி பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். அப்படி குறைக்கவில்லை என்றால் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என கூறினார்.பா.ஜ.க.,வுக்கு பெண்களை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை. பா.ஜ.க.,வினர் மேல் தான் பாலியல் பலாத்கார வழக்கு அதிகம் உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என நாடகத்தை தமிழகத்தில் பா.ஜ.க அரங்கேற்ற வேண்டாம் என்று நாராயணசாமி கூறினார்.இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் 6-வது பணக்கார முதலமைச்சர் ரங்கசாமி என மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவர் எந்த தொழிலும் செய்யவில்லை அப்படி இருக்க எப்படி பணக்கார முதலமைச்சராக வந்தார்? ஊழல் செய்ததால் தான் அவர் பணக்கார முதலமைச்சராக வந்துள்ளார். இந்த ஊழல் ஆட்சியில் புதுச்சேரி மக்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் நாராயணசாமி கூறினார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன