சினிமா
‘ஐடென்டிட்டி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் திரிஷா கொடுத்த கியூட் ரியாக்ஷன்

‘ஐடென்டிட்டி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் திரிஷா கொடுத்த கியூட் ரியாக்ஷன்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் திரிஷாவும் மலையாள நடிகரான டோவினோ தாமஸும் இணைந்து நடித்துள்ள படம் ‘ஐடென்டிட்டி’. இந்த படத்தில் வினய் ராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.இந்த படத்தை அகில் பால் இயக்க, இதனை ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் டோமினோ தாமஸ் இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார்.மருத்துவமனையில் நடக்கும் பிரச்சினைகளை மைய கருத்தாக வைத்தே ஆக்சன் நிறைந்த திரைக்கதையில் ‘ஐடென்டிட்டி’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில் ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகையின் திரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது. குறித்த புகைப்படத்தில் திரிஷா மிகவும் கூலாக காணப்படுகின்றார்.. இதோ அந்த புகைப்படங்கள்