சினிமா
சூர்யாவுக்கு வில்லனாகும் ட்ரெண்டிங் இயக்குநர்! இணையத்தில் கசிந்த செய்தி!

சூர்யாவுக்கு வில்லனாகும் ட்ரெண்டிங் இயக்குநர்! இணையத்தில் கசிந்த செய்தி!
பிரபல நடிகர் சூர்யா தற்போது சூர்யா-45 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வில்லன் தொடர்பான அதிரடி அப்டேட் சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் சூர்யா-45 ஆகையால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோயம்புத்தாரில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக முக்கிய நடிகர் நடிக்கவிருக்கிறார்என்ற தகவல் வைரலாகி வருகிறது.இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவிற்கு எதிராக வில்லன் ரோலில் இப்படத்தின் இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜி நடிக்க இருக்கிறார். இப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்றும் செய்தி கசிந்துள்ளது. இவரே இயக்கி இவரே வில்லனாகவும் நடிக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தில் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.