இலங்கை
வன்னி மாவட்டத்தின் பிரச்சனைகள் தொடர்பில் ரவிகரன் ஆளுநருடன் கலந்துரையாடல்!

வன்னி மாவட்டத்தின் பிரச்சனைகள் தொடர்பில் ரவிகரன் ஆளுநருடன் கலந்துரையாடல்!
வன்னி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சந்திப்பில் சமூக ஆர்வலர் கிருஷ்ணபிள்ளை சிவகுருவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.