சினிமா
அஜித்குமாருடன் என்ன பிரச்னை? முதன்முதலாக வாய் திறந்த பாலா

அஜித்குமாருடன் என்ன பிரச்னை? முதன்முதலாக வாய் திறந்த பாலா
நடிகர் சூர்யா நடித்த ‘காக்க காக்க’, ‘கஜினி’ போன்ற படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை, தவிர்க்க முடியாத சில காரணங்களால் அஜித் குமார் நடிக்க முடியவில்லை.
அதே போன்று பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதில் இருந்து அஜித்குமார் வெளியேறினார். இதற்கு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டது.
‘நந்தா’ படத்தை பாலா இயக்க சூர்யா நடித்திருந்தார். இதில் சூர்யாவுக்கு முன்பு அஜித் குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், நடிக்க முடியாமல் போய் விட்டது. பின்னர், நான் கடவுள் படத்துக்காக நீளமாக முடி மற்றும் தாடியை வளர்க்க அஜித்குமாரிடத்தில் பாலா கூறியுள்ளார். அஜித்தும் அப்படியே வளர்த்துள்ளார். தயாரிப்பாளர் அன்பு செழியன் மூலம் அஜித்துக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டது.
எனினும், பாலாவுக்கும் அஜித்துக்கும் ஒத்துப் போகாததால், நான் கடவுள் படத்தில் இருந்து அஜித்குமார் விலகி விட்டார். இந்த பிரச்னை தொடர்பாக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து அஜித்குமாருக்கு கொடுத்த சம்பளத்தை திருப்பி வட்டியுடன் கேட்டுள்ளனர். ஆனால், வட்டி கொடுக்க அஜித் மறுத்ததால் பிரச்னை ஏற்பட்டதாக தகவல் உண்டு.
இந்நிலையில், அஜித் குமாரை ‘நான் கடவுள்’ படத்தில் நடிக்க வைக்க நினைத்தது ஏன் என்பது குறித்து பாலா முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ”நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற விரும்பினோம். அஜித் குமாருக்கு ‘நான் கடவுள்’ கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அப்படத்தில் இருந்து அஜித் குமார் விலகி விட்டார். பிறகு அந்தப் படத்தில் ஆர்யா நடித்தார். அஜித்குமாரை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டேன். அது நடக்காமல் போய் விட்டது’ பாலா என்று கூறியுள்ளார்.