Connect with us

இந்தியா

ஆண்களை விட பெண்கள் அதிகம்: புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Published

on

Election Commissioner

Loading

ஆண்களை விட பெண்கள் அதிகம்: புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் 4,74,788 ஆண் வாக்காளர்ளும், 5,39,125 பெண் வாக்காளர்களும், 157 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10,14,070 வாக்காளர்கள் உள்ளனர்.புதுச்சேரியில் 01.01.2025 தகுதி நாளாகக்கொண்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டார்.அதன்படி,புதுச்சேரியில் 4,74,788 ஆண் வாக்காளர்ளும், 5,39,125 பெண் வாக்காளர்களும், 157 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10,14,070 வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் ஆண் வாக்காளரை விட 64,337 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.அதிகபட்சமாக வில்லியனூர் தொகுதியில் 45,576 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக உருளையன்பேட்டை தொகுதியில் 24357 வாக்காளர்கள் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குசாவடிகளிலும் காட்சிப்படுத்தப்படும் என தெரிவித்தார்.மேலும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களை தவிர்த்து முதல் 7 நாட்களுக்கு அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகள் மற்றும் துணை வாக்காளர் பதிவு அதிகாரிகள் அலுவலகங்களில் செயல்படும். வாக்காளர் வசதி மையங்களில் வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும் என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன