Connect with us

பொழுதுபோக்கு

கங்கை அமரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மதுரை மருத்துவமனையில் அனுமதி

Published

on

Gangai Amaran hospitalized madurai Tamil News

Loading

கங்கை அமரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மதுரை மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்க வந்த பிரபல இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லப்பட்டார்.இசையமைப்பாளர், இயக்குநர் என திரைப்படத்துறையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கங்கை அமரன். இவர் பிரபல சினிமா கம்பெனி எடுத்துவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்சமயம் சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய பகுதிகளை சுற்றி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கங்கை அமரன் படப்பிடிப்பில் பங்கேற்க மானாமதுரை வந்துள்ளார். அச்சமயம் திடிரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார்.செய்தி:சக்தி சரவணன் – மதுரை.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன