Connect with us

இந்தியா

டாப் 10 நியூஸ் : ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை முதல் ஜல்லிக்கட்டு முன்பதிவு ஆரம்பம் வரை!

Published

on

Loading

டாப் 10 நியூஸ் : ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை முதல் ஜல்லிக்கட்டு முன்பதிவு ஆரம்பம் வரை!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை உட்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதால் இந்தக் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகர பேருந்துகளில் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என மூன்று பொது போக்குவரத்திலும் ஒரே அட்டையை வைத்து பயணிக்க முடியும்.

Advertisement

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தனி அதிகாரிகள் நியமனம் குறித்த அறிவிப்பு இன்று தொடங்கும் 2025ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய ஜம்மு ரயில்வே கோட்டம், தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய ரயில் முனையம் ஆகியவற்றை இன்று மதியம் 12:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் www.madurai.nic.in என்ற வலைதளத்தில் தங்களது பெயரை இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று காலை 10 மணிக்கு வெளியிடுவார்கள் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் எதிரொலியாக பல்கலை. வளாகத்திற்குள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆலோசனை கூட்டம் பிசிசிஐ சார்பில் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 10, 11-ம் தேதிகளில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் ரூ.92.48க்கும் விற்பனையாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன