இந்தியா
டெல்லியில் அதிகரித்த பனிமூட்டம்- போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிப்பு!

டெல்லியில் அதிகரித்த பனிமூட்டம்- போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிப்பு!
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிமூட்டம் நிலவுகின்றதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
இதனால் விமான பயணிகள் மற்றும் ரயில் பயணிகள் கடந்த சில நாட்களாகவே கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 564 விமானங்கள் தாமதமாக வந்து தரையிறங்கின. மேலும் 95 ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் டெல்லியில் இன்றும் கடும் பனி மூட்டம் நீடித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.