Connect with us

இந்தியா

தமிழகத்தில் எமெர்ஜென்சி… ஆளுநர் அடுக்கடுக்கான கேள்விகள்!

Published

on

Loading

தமிழகத்தில் எமெர்ஜென்சி… ஆளுநர் அடுக்கடுக்கான கேள்விகள்!

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6) தொடங்கியது. தேசிய கீதம் சட்டமன்றத்தில் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், சட்டமன்ற நிகழ்வுகளை தணிக்கை செய்து ஒளிபரப்புவது அவசரகாலத்தை நினைவூட்டுகிறது என்று ஆளுநர் ரவி இன்று (ஜனவரி 6) தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது.

மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.

அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன