Connect with us

இந்தியா

டாப் 10 செய்திகள் : ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் முதல் தமிழகத்தில் HMPV பாதிப்பு வரை!

Published

on

Loading

டாப் 10 செய்திகள் : ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் முதல் தமிழகத்தில் HMPV பாதிப்பு வரை!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதை கண்டித்து, திமுகவினர் இன்று (ஜனவரி 7)காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாம் நாளாக கூடுகிறது. அப்போது மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும்,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில், சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ்  (HMPV) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திண்டுக்கல் – திருச்சி ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் இன்று முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

உலக புகழ் பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஜனவரி 14,15,16 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் பதிவு இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார சூழ்நிலை, சொந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் கனடா பிரதமர் பதவியையும், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால பிரதமராக தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் ரூ.92.48க்கும் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் பல்வேறு ரயில் திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன