Connect with us

பொழுதுபோக்கு

துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமார் கார்; காயமின்றி தப்பினார்

Published

on

Ajith Kumar 1x

Loading

துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமார் கார்; காயமின்றி தப்பினார்

துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.துபாயில் ஜனவரி 9-ம் தேதி தொடங்க உள்ள துபாய் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு நடிகர் அஜித் குமாரின் பந்தயக் குழு தயாராகி வருகிறது.துபாய் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சியின்போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளான போது பதிவான வீடியோவில், ஒரு திருப்பத்தில் நடிகர் அஜித்தின் கார் சாலையோர பாதுகாப்பு தடுப்பில் மோதி, கட்டுப்பாட்டை இழந்து சுழன்றது. இட்டில் அவரது காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் நடிக்ர் அஜித்குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். விபத்துக்குள்ளான காரில் இருந்து நடிகர் அஜித்குமார் வெளியே வந்ததை வீடியோவில் பார்க்க முடிகிறது.நடிகர் அஜித் குமாரின் கார் பந்தயக் குழுவின் பக்கம் இந்த விபத்து பற்றிய வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இது பயிற்சி பயிற்சியின் ஒரு பகுதி என்பதை வலியுறுத்துகிறது.  “அஜித் குமாரின் நடைமுறையில் பெரும் விபத்து ஏற்பட்டது, ஆனால், அவர் காயமடையாமல் வெளியே வந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளான வீடியோவைப் இங்கே பாருங்கள்:Ajith Kumar’s massive crash in practise, but he walks away unscathed.Another day in the office … that’s racing!#ajithkumarracing #ajithkumar pic.twitter.com/dH5rQb18z0செப்டம்பரில், நடிகர் அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் தனது சொந்த பந்தயக் குழுவைத் தொடங்கினார். ஷாலினி அஜித் குமார் ரேசிங்கின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துகொண்டு தனது கணவருக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரை மீண்டும் கார் பந்தய வீரராகப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது மனைவி ஷாலினி எழுதுகையில், “ரேஸ் கார் ஓட்டுநராக மீண்டும் உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, நீங்கள் விரும்பியதைச் செய்கிறீர்கள். உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பந்தய வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டார்.பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் தனது நீண்ட கால ஆர்வங்களில் ஒன்றான கார் ரேஸுக்கு திரும்புகிறார். முன்பு, பார்முலா பி.எம்.டபிள்யூ ஆசியா, பிரிட்டிஷ் ஃபார்முலா 3 மற்றும் எஃப்.ஐ.ஆ F2 சாம்பியன்ஷிப் போன்ற மதிப்புமிக்க நிகழ்வுகளில் போட்டியிட்ட அவர், இப்போது மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தனது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன