விளையாட்டு
தேசிய குதிரையேற்ற போட்டி: தங்கம் வென்று சாதித்த மாணவிக்கு கோவையில் பாராட்டு விழா!

தேசிய குதிரையேற்ற போட்டி: தங்கம் வென்று சாதித்த மாணவிக்கு கோவையில் பாராட்டு விழா!
டெல்லியில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட கோவை மாணவி “தங்கம் வெள்ளி மற்றும் வெண்கல” பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். பதக்கங்களை வென்ற மாணவிக்கு குதிரையேற்ற பயிற்சி பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.கடந்த 2024″ஆம் ஆண்டுக்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த டிசம்பர் மாதம் 26″ம் தேதி முதல் 30″ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து, சுமார் 150″க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொள்ள கோவை அலெக்சாண்டர் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை சேர்ந்த 11″ வயது மாணவி ஹாசினி இன்டிஜூனியஸ் ஹார்ஸ் சொசைட்டி தமிழ்நாடு மூலம் தேர்வு செய்யப்பட்டு அதன் மூலமாக தேசிய அளவிலான குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார்.அங்கு நடைபெற்ற போட்டிகளில் ஹாசினி தனது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி தங்கம் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று தமிழகத்தின் பெயருக்கு நற்பெயரை பெற்று தந்துள்ளார். இதனை தொடந்த்து இன்று கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள அலெக்சாண்டர் குதிரையேற்ற பயிற்சி பள்ளி வளாகத்தில் ஹாசினிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹாசினி,டெல்லியில் 60 சென்டிமீட்டர் பிரிவில் வெவ்வேறு குதிரைகளில் போட்டியிட்டு தங்கம் வெள்ளி வென்று, 4-வது இடத்தை வென்றேன். 80″சென்டிமீட்டர் பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளேன். குழு விளையாட்டு பிரிவில், ஷோ ஜம்ப்பிங் பிரிவில் முதலிடம் பிடித்து மொத்தமாக 8″தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளேன்.எனது 6″வயது முதல் குதிரையேற்ற பயிற்சிகளை பெற்று வருகிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிதான் எனது தேசிய அளவிலான முதல் போட்டி. எனது தலைமை பயிற்சியாளர் சக்தி பாலாஜி வழிகாட்டுதலின் படி, அவர் அளித்த கடுமையான பயிற்சியினை தினமும் செய்தால் தான் ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்று தேசிய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வழி வகுத்ததுள்ளது என தெரிவித்துள்ளார்.பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“