Connect with us

இந்தியா

மதுரை ஜல்லிக்கட்டு : மல்லுக்கட்ட தயாராகும் காளைகளும், காளையரும் : முழு விவரம்!

Published

on

Loading

மதுரை ஜல்லிக்கட்டு : மல்லுக்கட்ட தயாராகும் காளைகளும், காளையரும் : முழு விவரம்!

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632க்கும் மேற்பட்ட காளைகளும், 5,347க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

Advertisement

அதிலும் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அலங்காநல்லுார்,பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், இந்தாண்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கி இன்று மாலை 5 மணிவரை நடைபெற்றது.

Advertisement

இதில் காளையின் மருத்துவச் சான்றிதழ், காளையின் படம், உரிமையாளர் மற்றும் உதவியாளருடன் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் ஜல்லிக்கட்டு காளையை துன்புறுத்தாமல் விதிகளுக்கு உட்பட்டு போட்டியில் கலந்துகொள்வோம் என்ற உறுதிமொழியிலும் ஒப்பதல் அளித்த பின்னரே முன்பதிவு செய்யப்பட்டது.

அதேபோன்று கைபேசி எண் , ஆதார் எண், பெயர், வயது, முகவரி, உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்தனர். அவர்களுக்கான அனுமதிச்சீட்டு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

பொங்கல் திருநாளான ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2026 காளை மாடுகளும், 1735 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

மாட்டு பொங்கல் திருநாளான ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 4820 காளை மாடுகளும், 1914 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

காணும் பொங்கல் திருநாளான ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5786 காளை மாடுகளும், 1698 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன