Connect with us

பொழுதுபோக்கு

முதலிரவுக்கு தயாரான போலீஸ்: மாமியாரிடம் நல்ல பெயர் வாங்கிய மருமகன்; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

Published

on

Shanmugam Bharani

Loading

முதலிரவுக்கு தயாரான போலீஸ்: மாமியாரிடம் நல்ல பெயர் வாங்கிய மருமகன்; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

முத்துபாண்டிக்கு சாந்திமுகூர்த்தம்.. ரத்னாவுக்கு ஷாக் கொடுத்த பழைய காதலன் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் அறிவழகன் என்ற வாத்தியார் என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று, அறிவழகனை பாடம் எடுக்க சொல்ல அவனும் வாழ்க்கையை மையப்படுத்தி பாடம் எடுக்க ரத்னாவுக்கு அது பிடிக்காமல் போகிறது. இருந்தாலும் சீனியர் வாத்தியார் அவர் நல்லா தான் பாடம் எடுக்கிறார் என்று சொல்ல ரத்னா ஓகே சொல்லி வேலைக்கு எடுத்து கொள்கிறாள்.மறுபக்கம் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை பார்க்க வர அவர் புள்ளையை பார்த்ததும் ட்ராமா போட முத்துப்பாண்டி ரொம்ப நடிக்காதீங்க என்று பல்பு கொடுக்கிறான். பிறகு பரணி மற்றும் சண்முகம் இருவரும் சேர்ந்து முத்துப்பாண்டி, இசக்கி சாந்திமுகூர்த்தத்திற்காக நாள் குறிக்க செல்கின்றனர். இங்கே அறிவழகன் ரத்னா ரூமுக்கு வந்து முட்டைக்கண்ணு முருங்கைக்காய் என்று கலாய்க்க அதை பார்த்து ரத்னா ஷாக் ஆகிறாள்.நீ 9-வது படிக்கும் போது உனக்கு லவ் லெட்டர் கொடுத்து உன் அண்ணன் கிட்ட அடி வாங்கினவன் தான் நான் என்பதை அறிவழகன் ரிவீல் செய்கிறான். ரத்னா அவனிடம் கோபப்பட்டு பேச அவன் சென்றதும் அவன் மீது ஒரு சாப்ட் கார்னர் இருப்பதை வெளிப்படுத்துகிறாள். இதையடுத்து முத்துபாண்டிக்கு போன் செய்யும் பரணி உனக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறித்து இருக்கோம் சீக்கிரம் வீட்டுக்கு வா என்று சொல்ல அதை கேட்டு முத்துப்பாண்டி வெட்கப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வாயை கொடுத்து சிக்க பார்த்த சந்திரகலா.. கார்த்தியை பாராட்டிய சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கலசத்தை மீட்டு வர சந்திரகலா அதிர்ச்சியான நிலையில் இன்று, சந்திரகலா கார்த்திக் நான் தான் கலசத்தை எடுத்தது என்ற உண்மையை சொல்லி விட்டால் என்ன செய்வது என பயப்பட சிவனாண்டி அதெல்லாம் நடக்காது என அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறான். அடுத்து வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரி நீ என்னுடைய கௌரவத்தையும் இந்த குடும்ப மானத்தையும் காப்பாத்திட்ட என்று சொல்லி பாராட்டுகிறாள், அதே சமயம் உன் மேல ஒரு குற்றசாட்டு விழுந்து இருக்கு. அதுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லனு நீ நிரூபிக்கணும் என சொல்கிறாள்.  சந்திரகலா இடையில் புகுந்து அப்புறம் அவன் நான் தான் கலசத்தை எடுத்துதேன், நானும் சிவனாண்டியும் பேசிட்டு இருந்தோம் என என் மேல பழியை போடுவான் என பதற மயில்வாகனம் அவன் அப்படி சொல்லவே இல்ல, நீங்க ஏன் பதறுறீங்க என்று கேட்க சந்திரகலா சமாளித்து விடுகிறாள்.தொடர்ந்து மயில்வாகனம் இது எப்படி நடந்தது என கார்த்திக்கிடம் கேட்க கார்த்திக் விஷயம் தெரிந்தா வீட்டில் எல்லாரும் கஷ்டப்படுவாங்க, சந்திரகலா தான் என்று சொல்ல, மயில்வாகனம் அதிர்ச்சியாகிறார். சந்திரகலா, சிவனாண்டி இல்லாமல் முகம் தெரியாத எதிரி யாரோ இருக்காங்க என்று சொல்கிறான். அதன் பிறகு எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருக்க கார்த்தியும் சாப்பிட வர சந்திரகலா அவனை சாப்பிட விடாமல் நிற்க வைத்து அவனமானப்படுத்துவது போல் பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன