சினிமா
Baby John_ காக பார்பி கேர்ளாக மாறிய கீர்த்தி ..!! துபாயில் எடுத்த அட்டகாசமான போட்டோஸ்

Baby John_ காக பார்பி கேர்ளாக மாறிய கீர்த்தி ..!! துபாயில் எடுத்த அட்டகாசமான போட்டோஸ்
பாலிவுட் சினிமாவில் அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பேபி ஜான். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான போதிலும் வசூலில் சரிவை சந்தித்தது.2016 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனிலும் வசூலை வாரிக் குவித்து இருந்தது.d_i_aஇதை அடுத்து இந்த படத்தை கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பின் ஹிந்தியில் ரீமேக் செய்தார் அட்லீ. இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பை பெறவில்லை. சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் 50 கோடி அளவிலான வசூலை தான் ஈட்டி உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் இந்த படம் அட்லீக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இன்னொரு பக்கம் பேபி ஜான் படத்தின் பட ப்ரமோஷன் நிகழ்வுகளில் திருமணம் முடித்த கையுடனே கீர்த்தி சுரேஷ் பங்கேற்று இருந்தார். இவர் வருண் தவானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பேபி ஜான் திரைப்படத்திற்காக அவர் துபாயில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளார். கருப்பு நிற ஆடையில் பாபி கேர்ள் போல இருக்கும் கீர்த்தி சுரேஷ் பார்த்த ரசிகர்கள் தமது லைக்குகளை வாரிக் கொடுத்து வருகின்றார்கள்.