Connect with us

இந்தியா

ஆளுநரே பொறுப்பு : அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – சட்டப்பேரவையில் விவாதம்!

Published

on

Loading

ஆளுநரே பொறுப்பு : அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – சட்டப்பேரவையில் விவாதம்!

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் கூறியுள்ளன.

அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விதி எண் 56ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்தனர்.

Advertisement

தொடர்ந்து அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதன்மீது விவாதம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் பேசுகையில், “அண்ணா பல்கலை கழகத்துக்கு துணைவேந்தர் இல்லாததால், மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

விசிக எம்.எல்.ஏ.க்கள் சிந்தனை செல்வனும் ஆளுநர் தான் பொறுப்பு என்று கூறினார்.

Advertisement

பாஜக எம்.எல்.ஏ. காந்தி, இந்த சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன