Connect with us

இலங்கை

ஒரு லட்சம் குடியேறிகள் விரைவில் இலங்கைக்குள்!

Published

on

Loading

ஒரு லட்சம் குடியேறிகள் விரைவில் இலங்கைக்குள்!

இலங்கைக்குள் அடுத்துவரும் நாள்களில் ஒரு லட்சம் வரையான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழைவார்கள் என புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது – இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:

Advertisement

கடந்த சில நாள்களுக்கு முன்னர் இலங்கைக்குள் மியான்மரைச் சேர்ந்த 116 சட்டவிரோத குடியேற்றவாசிகள் (ரொஹிங்யர்கள்) நுழைந்துள்ளனர். எனவே, அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. படகுப் போக்குவரத்துக்காகப் பெருந்தொகைப் பணத்தை வழங்கிவிட்டே அவர்கள் மியான்மரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணை மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களுக்கு அமைய அடுத்த சில நாள்களுக்குள் ஒரு லட்சம் சட்டவிரோதக் குடியேறிகள் இலங்கைக்குள் நுழைவதற்குச் சாத்தியங்கள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் இலங்கைக்குள் வந்தால், அது எமக்கு பெரும் பிரச்சினையாகவே அமையும். எனவே, அது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்கள் தொடர்பில் தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன- என்றார்.  (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன