இந்தியா
கருப்பு சட்டை-வெள்ளை மாஸ்க்… சட்டமன்றத்தில் அதிமுகவின் அதிரடி என்ட்ரி!

கருப்பு சட்டை-வெள்ளை மாஸ்க்… சட்டமன்றத்தில் அதிமுகவின் அதிரடி என்ட்ரி!
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்ட தொடரின் மூன்றாவது நாள் நிகழ்வுகள் இன்று ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறுகின்றன.
ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றம், ஆளுநரின் வெளி நடப்பால் சர்ச்சையை சந்தித்தது. இதையடுத்து நேற்று ஜனவரி 7ஆம் தேதி, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று (ஜனவரி 8) மூன்றாவது நாளாக சட்டமன்றம் தனது இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் கூடிய நிலையில்… 8. 45 மணியிலிருந்து ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை வளாகத்துக்கு வந்தனர்.
இதில் எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு, யார் அந்த சார் என்ற கேள்வியோடு சட்டை பையில் பேட்சுகளையும் குத்தி வந்தனர். அதோடு டங்ஸ்டன் தடுப்போம் மேலூர் காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய வெள்ளை நிற முகக் கவசங்களையும் அணிந்து இன்று சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் உள்ளிட்டவற்றை இன்று சட்டமன்றத்தில் மீண்டும் அதிமுக வலிமையாக எழுப்ப திட்டமிட்டு இருக்கிறது. அதன் அறிகுறியாகத்தான் கருப்பு சட்டை, வெள்ளை மாஸ்க் அணிந்து சட்டமன்றத்தில் என்ட்ரி ஆகியிருக்கிறார்கள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.
அதிமுக தரப்பில் இன்று சம்பவம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
–