சினிமா
குடியிருப்பில் தீ விபத்து! உயிர் தப்பிய உதித் நாராயண்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

குடியிருப்பில் தீ விபத்து! உயிர் தப்பிய உதித் நாராயண்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல பாடகர் உதித் நாராயன் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல பாடல்கள் பாடி பிரபலமானவர். இந்நிலையில் இவரின் வீட்டு குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. பாடகர் உதித் நாராயணன் தமிழில் ‘சோனியா சோனியா, ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’ உள்ளிட்ட பல பாடங்களை பாடி தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்நிலையில் இவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது மும்பையில் உதித் நாராயணன் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த விபத்தில் சிலர் காயமடைந்ததகாவும், ஒருவர் உயிரிழந்த விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.திடீரென நடந்த இந்த தீ விபத்தினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பு முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது, உதித் நாராயண் கட்டிடத்தின் 9 வது மாடியில் வசிக்கிறார், அதே நேரத்தில் 11 வது மாடியில் தீ ஏற்பட்டது. இந்த சம்பவம் நடைபெரும் போது பாடகர் உதித் நாராயன் வீட்டில் இல்லை என்று அயல்வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக, உதித் நாராயண் காயமடையவில்லை என்று அண்மைய செய்திகளில் தெரியவந்துள்ளது.