சினிமா
கேப்டன் படங்களை சுட்டு வேற கலர்ல ஓட்டிட்டு இருக்காங்க.. Game Changer_ன் சீக்ரெட் அம்பலம்

கேப்டன் படங்களை சுட்டு வேற கலர்ல ஓட்டிட்டு இருக்காங்க.. Game Changer_ன் சீக்ரெட் அம்பலம்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த திரைப்படம் எதிர்வரும் பத்தாம் திகதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக இடம் பெற்று வருகின்றன.கேம் சேஞ்சர் திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக எஸ். ஜே சூர்யா நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான ‘ஜருகண்டி’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில், சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் கேம் சேஞ்சர் படமும் கேப்டன் படத்தின் காப்பி தான் என சொல்லாமல் சொல்லியுள்ளார். தற்போது அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.அதன்படி அவர் கூறுகையில், கேம் சேஞ்சரில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ராம்சரனுக்கும் அதிகாரம் மிக்க அரசியல்வாதியான எஸ். ஜே சூர்யாவிற்கும் இடையில் நடக்கும் மோதல்தான் இந்த படத்தின் கதையாக காணப்படுகின்றது.தென்னவன் படத்திலும் நேர்மையான தேர்தல் கமிஷனர் ஆன தென்னவன் ஐஏஎஸ் க்கும் தமிழக முதல்வரான நாசருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் அந்தப் படத்தின் கதையாக இருந்தது.மேலும் சத்ரியன் படத்தை சுட்டு தான் தெறி படமும், ராஜதுரை படத்தை சுட்டு கோட் படமும் வெளியாகி இருந்தது.அதுபோலவே இப்போது தென்னவன் படத்தை காப்பி பண்ணியது போல தான் கேம் சேஞ்சர் படமும் காணப்படுகின்றது என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கேப்டன் படங்களை வைத்து இவங்க வேற கலர்ல ஓட்டிட்டு இருக்காங்க என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.