சினிமா
சில்க் ட்ரக்ஸ், மது குடிக்கமாட்டார்..தலைக்கனம் இல்லை!! சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகை..

சில்க் ட்ரக்ஸ், மது குடிக்கமாட்டார்..தலைக்கனம் இல்லை!! சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகை..
80, 90களில் கவர்ச்சிக்கன்னியாக திகழ்ந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. அவரின் தற்கொலை இதுவரை என்ன காரணம் என்று அறியப்படாத நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருவார்கள்.அப்படி நடிகை அனுராதா அளித்த பேட்டியொன்றில், பிணவறையில் சில்க்-ஐ ஒரு மூலையில் கிடத்தியிருந்தார்கள். ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அவளது உடலை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.அவளை அந்தமாதிரி பார்ப்பதற்கு என்னால் முடியவே இல்லை. சில்க் ட்ரக்ஸ் எடுத்தார், மது குடித்தார் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவர் தலைக்கனம் பிடித்தவர் இல்லை, தலைக்கனம் பிடித்தவர் போல் நடிப்பார் என்று அனுராதா எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.